டி.ராஜேந்தர் இசை அமைக்கும் புதிய தமிழ் திரைப்படம்
சிஆர்டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘நான் கடைசி வரை தமிழன்'. இந்தப் படத்துக்கு சிலம்பரசனின் தந்தையும் , இயக்குனருமான டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் டீ.ராஜேந்தர் தெரிவிக்கையில் , இந்தப் படத்தின் தலைப்பில் இருக்கும் தமிழன் என்ற வார்த்தைதான் இந்தப் படத்துக்கு நான் இசை அமைக்கக் காரணம்.தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.