மீண்டும் பாரதி,இளைய ராஜாக்கள் கூட்டணி
இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் சிகரம் பாரதிராஜாவும் 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைத்து பணி ஆற்ற உள்ளனர் . இருவரும் இணைந்து 1977 ம் ஆண்டு 16 வயதினிலே படத்தில் முதன் முறையாக பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது .
இவர்களின் கூட்டணியில் வெளி வந்த அணைத்து படங்களின் பாடல்களும் ஹிட் அடித்தது மட்டும் அல்லாமல் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது . நிழல்கள் , அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை போன்ற படங்கள் பொக்கிசங்களாக நிலைத்துள்ளன.
இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து பனி புரியும் படத்துக்கு ஆத்தா என பெயர் இட்டுள்ளதாக தகவல். வெகு விரைவாக இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது .
Comments
Post a Comment